வியாழன், 21 நவம்பர், 2013

கட்டுரை – நவம்பர் 23 (  தமிழ்த்தாய்வாழ்த்துஏற்றுக்கொள்ளப்பட்டநாள் )
செயல்மறந்துவாழ்த்துவோமே!
“ என்நாட்டுஅவைப்புலவர்பாடஆரம்பித்தால்உன்நாட்டுமாமன்னன்கூடஎழுந்துநின்றாகவேண்டும்”. “எங்கேபாடச்சொல்லும்பார்க்கலாம்” . அவைப்புலவர்பாடத்தொடங்குகிறார்“ ஜனகனமணகதி.......” மாமன்னன்எழுந்துநிற்கிறார். ஒருபள்ளியில்நடைப்பெற்றஹைக்கூவடிவநாடகம்இது.
ஒருஅரசுவிழாவின்போதுஒருபிரபலமானபின்னணிபாடகர்பாடியதேசியக்கீதத்தைகுறுந்தகடுமூலமாககேட்கமுடிந்தது.அவர்தேசியக்கீதத்தை1.35நிமிடங்கள்பாடியிருந்தார்.அந்தஇடத்தில்இப்படியொருகேள்விஎழுந்தது.தேசியக்கீதம்52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்.அப்படித்தானே?”ஆம்! “ஏன்.............?”  இந்தக்கேள்விக்குயாரிடமும்பதில்இல்லை.
இங்கிலாந்துமன்னர்வில்லியம்ஜார்ஜ் - யைவரவேற்கும்பொருட்டுஐந்துபத்திகள்கொண்டஒருவாழ்த்துப்பாடலைகவிஞர்ரவீந்திரநாத்தாகூர்வங்கமொழியில்இயற்றினார்.பிறகுஅவரேஅதைஆங்கிலத்தில்மொழிப்பெயர்த்தார்.அவரின்நெருங்கியநண்பரானஅபித்அலிஅதைஇந்தியில்மொழிப்பெயர்த்தார்.அதன்பிறகுஒரேபொருள்கொண்டமூன்றுவிதமானதேசியக்கீதம்பாடப்பட்டுவந்தன.இம்மூன்றுபடைப்புகளுக்கும்இசைக்கோர்க்கும்பணியைதாகூர்மேற்க்கொண்டார்.அதில்இந்திமொழிப்பெயர்ப்புபாடல்முதன்முதலாகதிசம்பர் 27 – 1911 அன்றுகல்கத்தாஇந்தியதேசியகாங்கிரஸ்மாநாட்டில்இசைக்கப்பட்டது.
இந்தியவிடுதலைக்குப்பிறகுஅம்பேட்கர்தலைமையிலானசட்டவரைவுக்குழுஜனவரி 14 - 1950 அன்றுஇந்தியில்மொழிப்பெயர்க்கப்பட்ட”ஜனகனமணகதி” பாடலில்உள்ளமுதல்பத்தியைமட்டும்தேசியகீதமாகஏற்றுக்கொண்டது.தாகூர்முதல்பத்தியைபுராபி( காலை) ராகத்தில்  52 வினாடிக்குள்பாடிஇசையமைத்திருந்தார்.  எனவேஅப்பாடல்தோராயமாக  52 வினாடிக்குள்பாடிமுடிக்கவேண்டும்எனகாலநிர்ணயம்செய்யப்பட்டது.
தொடக்கக்காலம்தொட்டுபலரும்தேசியக்கீதத்திற்குகுரல்கொடுத்துவந்திருக்கிறார்கள்.இசையமைப்பாளர்கள்அவருக்குபிடித்தமானராகத்தில் ,தாளத்தில்இசையமைத்துதனியாகஆல்பம்வெளியிட்டுசுதந்திரஉணர்வைபறைச்சாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில்ஒவ்வொருமாநிலமும்தன்கென்றுஒருமாநிலப்பாடலைஉருவாக்கிக்கொள்ளமுணைந்தது.அதன்படிமாநிலஅரசுகள்விழாவின்தொடக்கத்தில்மாநிலப்பாடல்என்றும்இறுதியில்தேசியக்கீதம்என்றும்வரையறுத்துக்கொண்டது . எனவேதாகூர்சுரப்படுத்தியஅதிகாலைநேரபுராபிராகம்அதற்குஉகந்ததாகஇருக்கவில்லை.எனவேஎல்லாநேரத்திற்கும்பொருந்தும்படியாகசங்கராபரணம்ராகத்திலானதேசியக்கீதம்உருவாக்கிக்கொள்ளப்பட்டது.
தேசியக்கீதம்பற்றியதகவல்களைதகவல்அறியும்சட்டத்தின்கீழ்அறிந்துக்கொள்ளமுடியாது.ஏனெனில்அதற்கென்றுஎந்தவொருசட்டவிதிகளும்இல்லை. ஆனால்தமிழ்த்தாய்வாழ்த்துஅப்படியன்று. தமிழ்த்தாய்வாழ்த்துசட்டவிதிகளுக்குஉட்பட்டது.ஆம்!1970 ஆம்ஆண்டுதமிழகஅரசு – பொதுப்பணித்துறைமெமோஎண்- 3584 /  70 – 4 நாள் 23.11.1970 உத்தரவுஇவ்வாறுவரையறைசெய்துள்ளது.
1.“பெ. சுந்தரம்பிள்ளை“ இயற்றியமனோன்மணீயம்நூலிலுள்ள “ நீராரும்கடலுடுத்த ” என்கிறபாடல்தமிழ்தாய்வாழ்த்துப்பாடலாகஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பாடலைமாநிலஅரசு , உள்ளாட்சித்துறைமற்றும்கல்விநிறுவனங்களில்வழிப்பாட்டுபாடலாகவும் , விழாத்தொடக்கப்பாடலாகவும்பாடப்படவேண்டும். ( விழாமுடிவின்போதுபாடக்கூடாது)
2.  இப்பாடல்மோகனராகம், திஸ்ரம்தாளத்தில்திரு . எம்.எஸ் .விஸ்வநாதன்அவர்கள்இசைக்கோர்ப்பின்படிபாடப்படவேண்டும்.
இந்தஇரண்டுஉத்தரவுளும்அன்றையதுணைதலைமைச்செயலர்டி.வி. வெங்கடராமன்அவர்களால்பிறப்பிக்கப்பட்டுஅனைத்துதுறைகளுக்கும்அனுப்பிவைக்கப்பட்டது.
சிலப்பதிகாரம், மணிமேகலைஅளவிற்கு “மனோன்மணீயம்” பிரபலமானநூல்அல்ல.தமிழ்மொழிக்குரியமூலக்கதையும்அல்ல.எட்வர்டுபுளுவர்லிட்டன்பிரபுஎழுதிய“ தசீக்ரெட்வே ” எனும்ஆங்கிலஇலக்கியத்தைதழுவிஎழுதப்பட்டநாடகஇலக்கியம்அது.  சேரமன்னன்பாண்டியமன்னன்மீதுபோர்புரியசூழ்ச்சிமேற்கொள்ளும்கதை, இடையிடையேகாதல்கட்டமைப்பைக்கொண்டது.
இந்நாடகத்தை 1891 ஆம்ஆண்டுஇயற்றியசுந்தரம்பிள்ளைஅந்நூலைஅவரேவெளியிட்டுக்கொண்டார்.இந்நாடகத்தைதமிழ்நாடகத்தின்தந்தைஎனப்போற்றப்படும்பம்மல்சம்பந்தமுதலியாரிடம்கொடுத்துவிமர்சனத்தைக்கேட்டறிந்தார். பம்மல்அவர்கள் “இந்தஇலக்கியநாடகம்படித்துஉணர்வதற்குமட்டுமே. அரங்கேற்றுவதற்குஉகந்ததுஅல்ல ”எனவிமர்சனம்செய்தார்.  அவரதுவிமர்சனத்திற்கேற்பஅந்தஇலக்கியம்இதுநாள்வரைமக்கள்முன்நாடகமாகஅரங்கேற்றமாகவில்லை.ஆனால் 1942 ஆம்ஆண்டுஎம், எல், டாண்டன்திரைக்கதையில்பி.யூ.சின்னப்பாநடித்துதிரைப்படமாகஎடுக்கப்பட்டது.இப்படத்தில்தான்கே.வி. மகாதேவன்இசையமைப்பாளராகஅறிமுகமானார்.
“பத்தொன்பதாம்நூற்றாண்டின்பேராசிரியர்” எனசிறப்பிக்கப்படுபவர்பெ.சுந்தரம்பிள்ளை.தமிழாய்ந்ததமிழ்பேரறிஞர்அவர்.அவர்மூதாதையர்களின்பூர்வீகம்தமிழகம்என்றாலும்அவர்வசித்ததுமேற்குவெனிஸ்எனஅழைக்கப்படும்ஆலப்புழை.மலையாளம்திறம்படக்கற்றவர்அவர்.தமிழ்மூத்தமொழிஎன்பதால்தமிழ்மொழியில்பட்டப்படிப்புகளைத்தொடர்ந்தவர்.ஆங்கிலஅரசுவழங்கும்மிகஉயர்ந்தபட்டமானராவ்பகதூர்சிறப்புப்பட்டத்தைபெற்றவர். பேராசிரியர், துணைவேந்தர்எனபல்வேறுபதவிகளைவகித்தவர்.
தமிழ்த்தாய்வாழ்த்துமுதலில்கவிஞர்கண்ணதாசனைவைத்துஎழுதவைக்கலாம்எனமுடிவுசெய்யப்பட்டிருந்தது. கவிஞர்அவர்கள்முதலில்அதைமறுத்தார்.பிறகுஅதற்காகஒருபாடலைஎழுதவும்தொடங்கினார்.பல்வேறுதமிழ்அறிஞர்கள்அதைஏற்றுக்கொள்ளமுன்வரவில்லை.பிறகுபாரதியார்மற்றும்பாரதிதாசனின்கவிதைகள்  ,சிலப்பதிகாரம்உட்படபல்வேறுஇலக்கியங்களில்உள்ளவாழ்த்துப்பாடலைஎடுத்துவைத்துக்கொண்டுஆய்வுச்செய்யத்தொடங்கினார்கள். பாரதிதாசன்குழந்தைப்பாடலாகஇயற்றிய“ வாழ்வினில்செம்மையைசெய்பவைநீயே , மான்புகழ்நீயேஎன்தாயே ”  என்கிறப்பாடலும்,  மனோன்மணீயம்நூலில்பெ.சுந்தரம்பிள்ளைஇயற்றிய “ நீராரும்கடலுடுத்த ” மொழிவாழ்த்துப்பாடலும்தேர்விற்குரியதாகின.         
இவ்விருபாடல்களையும்தாகூர்இயற்றியதேசியக்கீதத்துடன்ஒப்பிட்டுபார்க்கப்பட்டது.தாகூர்ஆங்கிலப்புலவர்களால்பாராட்டுப்பெற்றவர்,உலகப்புகழ்பெற்றகவிஞர். அவருடன்ஒப்பிட்டுப்பார்க்கையில்பெ.சுந்தரம்பிள்ளைமொழியால், கல்வியால்மேம்பட்டவராகதிகழ்ந்தார். எனவேசுந்தரம்பிள்ளைஇயற்றியவாழ்த்துப்பாடல்தமிழ்த்தாய்வாழ்த்தாகஜீலை 7 -1970 அன்றுஒருமனதாகமுடிவுசெய்யப்பட்டது.இதைபாண்டிச்சேரிதமிழறிஞர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்களின்கவனம்மண்ணின்மைந்தரானபாரதிதாசன்மீதேஇருந்தது.எனவேஅவர்களின்பதிலுக்காகஐந்துமாதக்காலம்தமிழகஅரசுகாத்திருந்தது.
தமிழ்இலக்கியவாழ்த்துப்பாடல்களில்புவிஇயல், தத்தவஇயல், மொழிஇயல், வரலாற்றுஇயல், தொல்லியல்எனபல்துறைகளைகொண்டுஓர்இலக்கியப்பாடல்இயற்றப்பட்டதுஎன்றால்அதுமனோன்மணீயம்நாடகத்தின்வாழ்த்துப்பாடல்தான். இந்தச்சிறப்பினைஅறியவேண்டுமெனில்நமக்குமுழுப்பாடலும்தெரிந்திருக்கவேண்டும்! மனோன்மணீயம்நாடகத்தின்மொழிவாழ்த்துபாடலின்மொத்தவரிகள்பனிரெண்டு.அதில்ஐந்துவரிகளைநீக்கிஏழுவரிகளைமட்டும்தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலாகதேர்வுசெய்தார்கள்.
நீர்நிறைந்தகடற்பரப்பைஆடையாகஉடுத்தியநிலமகளின்திருமுகமாகப்பரதக்கண்டம்விளங்குகிறது.தெக்கணமாகியதென்னகம்திருமுகநெற்றியாகவும், தமிழகம்நெற்றிப்பொட்டாகவும்கொண்டது ( புவிஇயல்) .  ‘அனைத்துலகும்இன்பமுற ‘, ‘எத்திசையும்புகழ்மணக்கஇருந்தபெரும்தமிழணங்கே‘ (தொல்லியல் ) . ‘பல்லுயிரும்பலஉலகும்படைத்துஅளித்துத்துடைக்கினும்ஓர்எல்லையறுபரம்பொருள்‘( தத்துவம்) , கன்னடமும்களிதெலுங்கும்கவின்மலையாளமும்துளுவும்உன்உதிரத்துஉதித்துஎழுந்தேஒன்று ( மொழியியல் )”எனபல்துறைசிறப்புமிக்கபாடலாகஅதுஇயற்றப்பட்டிருக்கிறது.
மறைமலையடிகள் ,பரிமாற்கலைஞர், பேராசிரியர்பெ. சுந்தரம்பிள்ளை, பாரதியார்உட்படபலரும்தென்னகமொழிகளுக்குதாய்“தமிழ்” தான்என்றார்கள்.இராமலிங்கஅடிகள்தமிழ்எம்மொழிக்கும்தந்தைமொழிஎன்கிறார்.ஆனால்அன்றையநாளில்தென்னிந்தியாவில்நிகழ்ந்தமொழிஅரசியல்தமிழைதாய்அல்லதுதந்தைமொழிஎன்கிறகூற்றைஏற்றுக்கொள்ளஅண்டைமாநிலங்கள்முன்வரவில்லை. 
மலையாளம், தெலுங்கு ,கன்னடமொழியாளர்கள்அதற்குதொடர்ந்துஎதிர்ப்புதெரிவித்துவந்தார்கள். தமிழறிஞர்களைத்தவிர்த்துமற்றமாநிலமொழியாளர்கள்ஒன்றுகூடி‘தென்னகமொழிகளின்தாய்மொழிதமிழ்‘ என்கிறமுழக்கத்தைமுறியடிக்கதனிஇயக்கம்காணமுயன்றார்கள். இதனைக்கருத்தில்கொண்டுகன்னடம், ,தெலுங்கு , மலையாளம், துளு , ஆரியம்சொற்கள்பொதிந்தஐந்துவரிகளைநீ்க்கிமற்றவரிகளைக்கொண்டவாழ்த்துப்பாடலைதமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலாகஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்றுதமிழ்த்தாய்வாழ்த்துப்பாடல்கன்னடம், மலையாளம், தெலுங்குமொழிகளில்மொழிப்பெயர்க்கப்பட்டுபாடநூல்களில்இடம்பெற்றுள்ளது.ஒருவேளைஅந்தஐந்துவரிகளையும்தேர்வுக்குழுநீக்காமல்இருந்திருந்தால்இன்றுஅப்பாடல்மற்றமொழிகளில்மொழிப்பெயர்த்திருக்கவாய்ப்பில்லை. சரி! பாரதிதாசனின்“ வாழ்வினில்செம்மையைசெய்பவைநீயே ” என்கிறபாடல்என்னஆனது? அதுதான்பாண்டிச்சேரிமத்தியஆட்சிப்பகுதியின்தமிழ்த்தாய்வாழ்த்து. 
“ நீராரும்கடலுடுத்த“பாடல் “ஆசிரியப்பா” இலக்கணப்படிஅமைந்தப்பாடலாகும்.எனவேஅது “அகவற்பாஓசை” யைஉடையது.இதனைக்கருத்தில்கொண்டுஅப்பாடல்மெல்லிசைமன்னன்எம்.எஸ்விஸ்வநாதனின்இசையில்மோகனராகத்தில்டி.எம்.சௌந்தராஜன்குரலில்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 
இன்றுபலபாடகர்கள்தமிழ்த்தாய்வாழ்த்துப்பாடலைநவீனப்படுத்தும்முயற்சியில்இறங்கியிருக்கிறார்கள். அதைஅவரவர்ராகத்தில்பாடிஇணையத்தில்கோர்த்திருக்கிறார்கள்.அதைதேடிப்பிடித்துகேட்கும்பொழுதுவாழ்த்துதுமேஎன்பதுவால்த்துதுமேஎன்றும்முகாரிராகத்திலும்ஒலிப்பதைக்கேட்டுஒருசராசரிதமிழனால்கவலைப்படாமல்இருக்கமுடியவில்லை!                                               
அண்டனூர்சுரா (தொடக்கப்பள்ளிஆசிரியர்)
மண்டேலாநகர்கந்தர்வகோட்டைபுதுக்கோட்டைமாவட்டம்613301
தொடர்புக்கு958565 - 7108

                       




சனி, 9 நவம்பர், 2013

இந்தியசமூகப்புரட்சியில் திராவிட இதழ்களின் பங்கு

கட்டுரை
                                 
                                                                                                                          அண்டனூர் சுரா.
                                                காரிருள்அகத்தில்நல்ல
                                                                                                கதிரொளிநீதான்இந்தப்
                                                                        பாரிடைத்துயில்வோர்கண்ணிற்
                                                                                                பாய்ந்திடும்எழுச்சிநீதான்
                                                                        ஊரினைநாட்டஇந்த
                                                                        உலகினைஒன்றுசேர்க்கப்
                                                                        பேரறிவாளர்நெஞ்சிற்
                                                                                                பிறந்தபத்திரிக்கைப்பெண்ணே!
                                                                                                                பாவேந்தர் பாரதிதாசன். 
       அமெரிக்க விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சமீபகால விஞ்ஞானிகளின் தலைமகன் என போற்றப்படுகிறார்  .அத்தகைய சிறப்புமிக்க ஐன்ஸ்டீனால் கூடஎதிர்க்காலஉலகம் எப்படி இருக்குமென அணு சக்தி துறையைத்தாண்டி அவரால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் அவர் வயதை ஒத்த ஈ.வெ.ரா பெரியாரால் அனைத்து துறைகளிலும் இனி வரும் உலககத்தை கணிக்கவும் எழுதவும் முடிந்தது .அதற்கான காரணம்  பெரியார் மக்களோடு மக்களாக இருந்துக்கொண்டு மக்களுக்காக சிந்தித்தார் .
1943 மார்ச் 21,28 நாளிட்ட  திராவிட நாடு இதழ் “ இனி வரும் உலகம் “ என்கிற கட்டுரையை  வெளியிட்டது. அந்தக்கட்டுரையை பிரிட்டன் உட்பட பல உலக நாடுகள் மொழி பெயர்த்துக்கொண்டு ஆய்வு செய்யத் தொடங்கியது. அந்தக்கட்டுரையை வாசித்த சர் .ஸ்டாபோர்டு கிரிப்ஸ் அவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியாவிற்கு வருகையில்,பெரியார் அவர்களை பெருமிதத்துடன் சந்தித்தார் என்பது வரலாறு. அக்கட்டுரையின் சாராம்சம் இதுதான் “ குழந்தை பிறக்க  கணவன் தேவையில்லை.  சோதனைக்குழாயில் குழந்தை பிறக்கும். பணத்தை கட்டிக்கொண்டு எங்கும்  செல்ல வேண்டியதில்லை. வேண்டிய  இடத்தில் பணத்தை எடுத்துக்கொள்ள வீதிக்கு வீதி  இயந்திரம்  இருக்கும். பணம் , காசு என்கிற உலோக நாணயமே இருக்காது. மக்கள், உடற்பயிற்சிக்காக வேலை செய்ய வேண்டுமே என்கிற கவலையோடு உழைப்பு வேலைக்காக அலைவார்கள்.  நலம் விசாரிப்புகள்  அலைபேசியில் நடந்தேறும். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிகள் இருக்கும். கணினி எனும் ஒரு சாதனம் உலகத்தை இயக்கும்,...............................”
“  குடி அரசு - தலையங்கம் , திராவிட நாடு – கட்டுரை , விடுதலை -   சிந்தனை,  முரசொலி – கடிதம்  இந்நான்கும்  திராவிட கொள்கையின் பாதுகாப்பு அரண்கள்.“ என்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
                                  குடி அரசு ஈ.வெ.ரா பெரியார் நடத்திய திங்கள் இதழ்.அந்த இதழில் பெரியார்தலையங்கம் வாயிலாக கேட்கிற கேள்விகளுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு பதில் சொல்வதற்கென்றே புற்றீசலைப்போலபுதிது புதிதாக இதழ்கள் வெளிவந்துக்கொண்டிருந்தன என்றால் குடி அரசு இதழ் எத்தகைய கருத்துச்செறிவுடன் உலா வந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.அவரது கேள்விகள் மூடத்தனமானது என கிண்டலடித்த இதழ்களும்தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை.அதே நேரம் குடி அரசு இதழின் கட்டுரையை திராவிட கொள்கையைக் கொண்டவர்களை விடவும்இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களே தீர்க்கத்தரிசனமாக கொண்டார்கள். இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த பிரிட்டீஸ் அரசாங்கம் பெரியாரின் கட்டுரைகளை கத்தரித்து பிரிட்டன் நாட்டிற்கு அனுப்பி இக்கேள்வி நோக்கில் ஆய்வை மேற்கொள்ள விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டது.“ ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா?“, “ எதிர் காலத்தில் பணம் திருட்டுப்போகுமா?““ கடன்களை திருப்பித்தராததற்கு சிறைப்பிடிக்கக்கூடாது“ “ அவர் யோக்கியமான மனிதர் ( பகத் சிங்) , மே தினமும் திராவிடர் கழகமும்,” போன்றவை குடி அரசு இதழில் வெளிவந்த மிகச்சிறந்த தலையங்கங்களாகும்.
பத்தரிக்கைகள் மூலமாக சமூகப்புரட்சிக்கு வித்திட்ட இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம்தான்.திராவிட இயக்கம் கண்ட பத்தரிக்கைகள் கணக்கில் அடங்காதவை.குடி அரசு , நம்நாடு, திராவிட நாடு,விடுதலை, புரட்சி, பகுத்தறிவு ( வாரம், நாள், மாதம் ),  அறப்போராட்டம், திராவிடன், ரிவோல்ட் ( ஆங்கில வாரப்பத்திரிக்கை) , முரசொலி , ஈரோடுவாசி, ஈரோட்டுப்பாதை,லிபரேட்டர் ( பாரிஸ்டர்), நகர தூதன், ஜஸ்டீஸ், உண்மை, நிலவு,தொழிலாளர் மித்ரன், தனி அரசு, தோழன், குயில், மாலைமணி.கரண்ட், நாத்திகம். The modern nationalist, Home land, காஞ்சி, நவயுகம்,  நவசக்தி,சண்டே அப்சர்வர்.................. என அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகையதிராவிட இதழ்களுக்கு தலையான இதழ் என்றால் அது குடி அரசுதான்.
1925  மே இரண்டாம் தேதி . ஈ.வெ.ரா அவர்கள் “ உண்மை விளக்கம்“ பிரஸ் மூலமாக குடி அரசு வார இதழை கொண்டுவந்தார்.பச்சை மேலட்டை கொண்ட முதல் குடி அரசு இதழை தொடங்கி வைத்த திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அவர்கள் “ சுய மரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளர குடி அரசு பாடுபடும் “ எனக் கேட்டுக்கொண்டார்.என்ன நோக்கத்திற்காக குடி அரசு இதழ் தொடங்கப்பட்டதோ, அதன் நோக்கிலிருந்து சிறிதும் பிசகாமல் சமூக புரட்சியை ஏற்படுத்தியது.
“ சுசீந்திரம் சத்தியாக்கரகம் ஓர் எழுச்சி“ 31.1.1926 அன்று குடி அரசு இதழில் வெளிவந்த தலையங்கம் , வகுப்பு வாரியான இட ஒதுக்கீட்டிற்கு  வழியமைத்துக்கொடுத்தது “ ........................... 1909 ஆண்டு முதல் மின்டோ மார்லி சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.  உயர் பதவிகளில் இந்தியர்கள் இருக்கலாம் என அந்த சீர்த்திருத்தம் கூறுகிறது. 1898 முதல்  இன்றைய தேதி வரையிலான ஹை கோர்ட் ஜட்ஜ்களில் ஒன்பதில் எட்டு பேர் பார்ப்பனர்கள். ஒருவர் நாயர்.இதுதான் அரசியல் சீர்த்திருத்தமா? மின்டோ மார்லி இதைத்தான் வழியுறுத்துகிறதா?.“ என்றவாறு மின்டோ மார்லி சீர்த்திருத்தத்தின் முகமுடியை சாடிருந்தது. அதன் பிறகு ஏற்பட்டதுதான் மான்டெகு செமஸ்போர்டு சீர்த்திருத்தம். அந்த சீர்த்திருத்தத்தின் படிதான் இன்று சட்ட மன்றங்களிலும் ,அரசு உயர் பதவிகளும் அனைத்து சமூக மக்களும் இடம் பெற முடிகிறது.
28.08.1927 தலையங்கம் வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை மகாத்மா காந்தி ஏற்காததை  “ மகாத்மா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்“ என குடி அரசு  குற்றம் சாட்டியது.1933 .அக்டோபர் 29 அன்று “ இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?“ என பெரியார் அவர்கள் ஒரு தலையங்கம் தீட்டினார். ஆங்கிலேயே நிர்வாகத்தை கண்டித்து எழுதப்பட்ட தலையங்கம் அது.காந்தியையும், இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களையும் ஒரு சேர விமர்சித்த ஒரே இதழ் குடி அரசுதான்.
குடி அரசு முதலில் ஈரோடு நகரத்திலிருந்து வெளிவந்துக்கொண்டிருந்தது. அரசியலின் நெருக்கடி , அனைத்து மக்களிடமும் குடியரசை கொண்டுப்போய் சேர்க்க வேண்டிய கட்டாயம், நிதிச்சுமை இதன் காரணமாக  தலைமை இடத்தை ஈரோடு நகரத்திலிருந்து சென்னைக்கு மாற்றினார். அதன் பிறகுதான் குடி அரசு வெளிவருவதில்  அரசியல் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு வருடத்திற்கு பிறகு 16.10.1943 அன்று மீண்டும் குடி அரசு  வெளிவரத் தொடங்கியது. குடி அரசு இதழை வரவேற்று “ வந்தாயா குடி அரசே“ என தமிழ் நாடு முழுமைக்கும் பேனர் வைத்து குடி அரசை வரவேற்றார்கள். குடி அரசு இதழ் செய்த  பிரமிக்கத்தக்க சாதனைகள் ஏராளம்.மனிதனை மனிதன் சுமப்பதை கண்டித்தது,  மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதற்கு மாற்றுவழி தேடியது, தாழ்த்தப்பட்ட மக்களை உயர் வர்க்க மக்களுக்கு இணையாக உயர்த்தியது. மக்களிடம்  சுய மரியாதையை வளர்த்தது.  இத்தகைய மாற்றங்களுக்கான சட்ட வரம்புகளை எதிர்காலத்தில் தமிழக சட்ட சபையிலும், இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றிட காரணமாக இருந்தது.
எஸ்எஸ்.எல்.சி தேறியவர்கள் எல்லோருக்குமே கல்லூரியில் இடந்தர முடியுமா? என்று நமது முதலமைச்சர் கேட்டாராம்! எந்த நாட்டிலுமே இது இயலாதே என்றாராம்.  இந்த மாகாணத்தில் வருடந்தோறும் கல்விக்காகச் செலவழிக்கிற 40 கோடியில்  இந்த நாட்டுக்கு உரியவனுக்கு பங்கு இல்லையா? அரசாங்கம் உடனே ஒரு சுற்றறிக்கையாவது விட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முதலுரிமையை கொடுத்துவிட்டு , மற்றதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம், ..................“ நமது முதல்வர் எனும் தலைப்பில் 02.08.1965 ஆம் ஆண்டு விடுதலையில் பெரியார் அவர்கள் தீட்டிய தலையங்கம் இது. இன்று நமது மத்திய , மாநில அரசுகள் அனைவருக்கும் கல்வி, முதியோர் கல்வி, இலவசக்கல்வி , சமச்சீர் கல்வி பற்றி பேசுகிறது என்றால் அதற்கு காரணம் விடுதலையில் பெரியார் எழுதிய  நமது முதல்வர் என்கிற தலையங்கம்தான். மேலும் அந்த இதழில் பெரியார் தீட்டிய தலையங்கம் இந்தியா சமூகத்தில் புரட்சி ஏற்படுத்தியவை .“ பெண்கள் அலங்கார பொம்மைகளா?  , இது நமக்கு துக்க நாள், ஜனவரி 26  தடியாட்சி நாள், இமயமலை சாய்ந்ததா? (ரஷ்ய ஸ்டாலின் மரணம்), நீதி கேட்டது யாராலே?,சுதந்திராக்கட்சி அரசியல் கட்சியல்ல - இனநலக்கட்சி,............ போன்றவைகள் குறிப்பிடத்தக்கவை.
1935 ஆம் ஆண்டு நீதிக்கட்சியினரால் சென்னையில் துவங்கி வாரம் இரு முறை நாளேடாக வந்துக்கொண்டிருந்த விடுதலை இதழ் 1937 ஆம் ஆண்டு பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.பெரியார் கைக்கு மாறியவுடன்  வெளிவந்த முதல்  தலையங்கமே ஆளும் வர்க்கத்தை கிலி மூட்டச்செய்தது.“ சரணாகதி மந்திரி சபை. இன்று -------------- ஆவது நாள்? “. குடி அரசு  இதழை விடவும் விடுதலை இதழே திராவிடர் கழகத்திற்கு போர் வாளாக இருந்தது. காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள்  விடுதலை இதழின் துணை ஆசிரியராக இருந்து பல்வேறு கட்டுரைகளை புனைப்பெயரில் எழுதத்தொடங்கினார். அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரைகளும் சமூக புரட்சியின் மாமருந்து எனலாம்.
இந்தியாவில் தூக்குத்தண்டனையை எதிர்த்த முதல் இதழ்விடுதலைதான்.பெரியார் அவர்கள் விடுதலையில் தூக்குத்தண்டனையை எதிர்த்தும், கண்டித்தும் தொடர்ந்து தலையங்கம் எழுதி வந்தார்.அதன் காரணமாகத்தான் நெடுங்காலம் விசாரணையின்றி சிறையிலிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஏ.கே .கோபாலன் அவர்களும்,  தெலுங்கானா போராட்டத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 12 இளைஞர்களும் தூக்குத்தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
பெரியாரின் நெருங்கிய நண்பர் இராசகோபாலாச்சாரியார்.அவரது அரசியல் நடவடிக்கைகளை விடுதலை கண்டிக்க தவறவில்லை.அவர் கொண்டுவந்த குல கல்வி முறையை  ஒழித்துக்கட்டியதில் விடுதலை பங்கு அளப்பரியது. பெரியாரின்  நிழலாக கருதப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் சில தவறுகளையும் விடுதலை சுட்டிக்காட்டவே செய்தது. பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தொண்டன் என்றால் கலைஞர் மு.கருணாநிதிதான்.கல்லக்குடி போராட்டம், கருப்புச் சட்டை படையின் முதல் தொண்டன்  என பல போராட்டங்களில் பெரியார் அவர்களுக்கு பக்க பலமாக இருந்தவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்.நெருங்கிய தொண்டன் என்றாலும் விடுதலையில் சில தவறான முன் உதாரணங்களை சுட்டிக்காட்டவே செய்தார். ஆம், பூம்புகாரில் கண்ணகிக் கொட்டம் எழுப்பும் செய்தியை கேள்வியுற்ற பெரியார் 11.11.1968 ஆம் ஆண்டு விடுதலையில் “பத்தினி பதிவிரதை“ என தலையங்கம் தீட்டினார். “ இடித்தொழிக்க வேண்டிய கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய சின்னங்களாகக் கொள்வதும், கண்ணகிக்குக் கோயில் கட்டுவதும் , முன்னேறக்கழகத்தின் முக்கியமான முதல் பணி என்றால் , இந்தப் பரிதாபத்திற்குறிய  தமிழர்களின் எதிர்காலம் என்ன ஆவது.? மாண்புமிகு கருணாநிதி அவர்களை மனம் மொழி மெய்களால் பாராட்டுகிறவன் நான். ஆனால் கம்பன், கண்ணகி , பாரதிகளுக்குச் சிலை வளர்த்துக்கொண்டுப்போனால் கையும் மெய்யும் சகித்தாலும் மனம் சகிக்க மாட்டேன் என்கிறதே!“ என தலையங்கம் தீட்டினார். அதே நேரம் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்ட தவறியதில்லை விடுதலை.1971 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிப்பெற்ற போது விடுதலையில் கலைஞருக்கு கடிதம் எழுதினார்.“உங்களைப்போல பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை இல்லை.எனக்குப் பழி நீங்கியது.உங்களுக்கு உலகப்புகழ் கிடைத்தது.“ என எழுதினார்.பெரியார் கையில் தவழ்ந்த இதழ்கள் பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பத்திரிக்கை பெண் அல்லவா!
சட்ட மன்றத்தில் தீர்மானம் இன்றி உலகம் முழுமைக்கும் ஒரு சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றால் அது பெரியாரின் எழுத்து சீர்த்திருத்தம் தான்.இந்தியாவில்  எழுத்து சீர்த்திருத்தத்தை மேற்கொண்ட முதல் இதழ் என்றால்அது பகுத்தறிவுதான். இதற்குமுன்பு  வீரமாமுனிவர் மேற்கொண்ட  எழுத்து சீர்த்திருத்தமே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அவர் கல்வெட்டு எழுத்துகளில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தார். ஆனால்  பெரியார்  ஏற்படுத்திய சீர்த்திருத்தம்  எழுத்துகளின் வடிவத்தை  எளிதாக்கியது. எழுத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முற்பட்டது.
13.01.1935 நாளிட்ட பகுத்தறிவு இதழில் 13 எழுத்துகளின் வடிவங்களை மாற்றினார் அவர்.( ணா,னா,றா, ணொ,னொ,றொ, ணோ, னோ,றோ, ணை, னை,லை, ளை ) மேலும் அவர் ஐ என்பதை அய், என்றும் ஔ என்பதை அவ் என்றும் மாற்றிக்கொண்டால் உயிர் 5 மெய் 15 ஆய்தம் 1 சிறப்புக்குறி 8 ஆக 29 எழுத்திற்குள் தமிழ் எழுத்து வடிவத்தை அடக்கலாம் எனறும் கூறியிருந்தார். அந்த சீர்த்திருத்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழக அறிஞர்கள் முன்வரவில்லை என்பது ஏனோ?
“திராவிட நாடு திராவிடர்க்கே!“ என்பது திராவிடர் கழகத்தின் தாரக மந்திரம். ஆனால் திராவிட நாடு இதழ் அப்படியல்ல. ஆரியர்களும், தமிழர்களும் ஏன் ஆங்கிலேயர்கள் கூட திராவிட நாடு இதழை கையில் வைத்துக்கொள்வதில் பெருமையாக கருதினார்கள்.காரணம் திராவிட நாடு இதழ் தெரிந்த செய்திகளை விடுத்து தெரியாத செய்திகளையே அதிகம் பேசியது.
வரலாற்றுச் சம்பவங்களுடன் தமிழ் இலக்கியத்தை கலந்து சமூகப்புரட்சியை தோற்றுவித்த இதழ் என்றால் அது திராவிட நாடு இதழ்தான்.இவ்விதழின் தலையங்க தலைப்புகளே புரட்சியை ஏற்படுத்தியது.“ இப்படை தோற்கின் எப்படை வெல்லும், கண்ணீர்த்துளிகளே!,மரத்துண்டு, தம்பியுடையான் படைக்கு அஞ்சான், ஆரிய மாயை, தம்பிக்கு மடல்,எல்லாரும் இந்நாட்டு மன்னர்,ஆற்றோரம், தலைப்பில்லை, என்னுடைய அழகிய அணங்கு, அரசாண்ட ஆண்டி, மக்கள் கரமும் மன்னன் சிரமும், எட்டு நாட்கள், இருளில் ஒளி, ஏழை எரிமலை, உலகப்பெரியார் காந்தி, அறப்போர், தமிழரின் மறுமலர்ச்சி, புன்னகை, பொன்னொளி, சொர்க்கத்தில் நரகம், அந்திக்கலம்பகம், மழை, இருளகல, நண்பர்கள் கேட்டதற்கு, குடியாட்சி கோமான் , மாஜி கடவுள்கள் ,............... என அடுக்கிக்கொண்டே போகலாம். 
              சாக்ரடீசைச் சாகடித்த கிரேக்க நாட்டிலே , இன்று சாக்ரடீசுக்காகப் பரிந்து பேசவும், வாழ்த்தவும் மக்கள் உள்ளனர். ஆனால் எந்தத் தெய்வங்களைச் சாக்ரட்டீஸ் நிந்தித்தார் என்று குற்றம் சாட்டி விஷம் கொடுத்து அவரைக் கொன்றனரோ , அந்தக் கடவுள்கள் இன்று இல்லை.  21.08.1949 நாளிட்ட திராவிட நாடு இதழில் மாஜி கடவுள்கள் எனும் தலைப்பில் அண்ணா எழுதிய கட்டுரைக்கு அவர் கொடுத்த முன்னுரை இது.“ கடவுள் மறுப்புக் கொள்கைக்கொண்ட நீங்கள்  கடவுள் பற்றி எழுதலாமா?“ - கடிதம் வாயிலாக வாசகர்கள்  அண்ணாவிடம் கேட்டுக்கொண்டார்கள். ஜீவஸ்  எனும் தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரையில் தலைப்பை மீண்டும் படிக்குமாறு வாசகர்களை அவர் கேட்டுக்கொண்டார். “ மாஜி கடவுள் “ அல்ல, தலைப்பு . மாஜி கடவுள்கள்.  உலக கடவுள்களின்  லீலைகளை , பொய் பிரச்சாரங்களை வெட்ட வெளிச்சமாக காட்டும்  அகராதியாக  அந்தக் கட்டுரை உலகில் போற்றப்படுகிறது.
1939 – திசம்பர் -17 நாள் அன்று குடி அரசு இதழில் “ திராவிட நாடு திராவிடர்க்கே“ என பெரியார் தலையங்கம் தீட்டியிருந்தார். அந்த தாரக மந்திரத்தை மனதில் நிலைநிறுத்திக்கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்த தலையங்கத்திற்கு வலு சேர்க்கும் விதமாக 1942 மார்ச் 8 அன்று காஞ்சியை தலைமையிடமாகக்கொண்டு திராவிட நாடு எனும் இதழை கொண்டுவந்தார். திராவிட இதழ் தொடங்குவதற்கு முன்பு அவர் “ தன்னை வெல்வான். தரணியை வெல்வான்“ என்கிற வாசகத்துடன் காஞ்சி எனும் ஒரு இதழை நடத்திக்கொண்டிருந்தார். அந்த காஞ்சி இதழைத்தான் திராவிட நாடு என கொண்டுவந்தார். திராவிட நாடு  வெளி வரத்தொடங்கிய காலத்தில் குடி அரசு இதழ் வெளிவருவதில் சிக்கல் இருந்துக்கொண்டிருந்தது.எனவே குடிஅரசு இதழுக்கு மாற்று இதழ் என திராவிட நாடு பேசப்பட்டது.
உலகில் அதிக புனைப்பெயர்களுடன் கட்டுரை எழுதியவர் பேரறிஞர் அண்ணாதான்.1934 ஆண்டு நவயுகம் என்னும் கிழமை இதழில் எழுதத்தொடங்கிய அண்ணா 1969 –ம் ஆண்டு வரை சுமார் 35 ஆண்டுகள் ,ஏறக்குறைய இருபத்தொரு புனைப்பெயரில் எழுதியிருக்கிறார். பரதன், சௌமியன், வீரன், நக்கீரன், ஒற்றன்,சம்மட்டி, சமதர்மன், அண்ணாத்துரை, வீனஸ் போன்றப்பெயர்கள்  அதில் முக்கியமானவை.
திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக்கழகம் உதயமான காலம் அது.தொண்டர்கள் கடிதம் வாயிலாக கேட்டார்கள்.கட்சியின் பெயரை திராவிடர் முன்னேற்றக் கழகம் என்றல்லவா வைத்திருக்க வேண்டும்? ஏன் திராவிட முன்னேற்றக்கழகம் என்று வைத்தீர்கள்?“ அந்த கேள்விக்கு திராவிட நாடு இதழில் இவ்வாறு பதில் எழுதினார். “................. திராவிடர் முன்னேற்றக்கழகம் என்று கூறும் பொழுது , அதில் திராவிடர்கள் மட்டும் அங்கம் பெறலாம் என்று அரண் எழும்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு, காலப்போக்கிற்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை.திராவிட மண்ணில் திராவிடர்கள் மட்டுமே வாழலாம் என்று வரையறை செய்வது குறுகிய நோக்கமாகும்.இங்கே ஆரியரும் வாழலாம், கிறித்தவர்களும் வாழலாம், முகமதியர்களும் வாழலாம் எனும் பரந்த நோக்கத்தோடு கட்சியின் பெயர் திராவிட முன்னேற்றக்கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது......................“
இன்று இந்தியாவில் மண்ணின் மைந்தர் எனும் கொள்கை தலைவிரித்தாடுகிறது. வன்னியர் ஓட்டு அந்நியர்க்கு இல்லை என்றும்  மராட்டினம் மராட்டியர்களுக்கே ! என்றும் கீழ்த்தரமான  சிந்தினைகள் இந்தியாவில் புரையோடிக்கிடக்கின்றன. இத்தகைய சிந்தனைகளை மாற்றும் மருந்தாக  திராவிட நாடு இதழின் பதில் அமைந்திருக்கிறது என்பதும் இந்திய சமூக ஒற்றுமைக்கு தூவிய உரம் அன்றோ!
                  1939 ஆம் ஆண்டு விடுதலை ஏட்டின் துணையாசிரியராக பொறுப்பேற்றப்பின் அண்ணா அவர்கள் பொறுப்பேற்றப்பின் அவர் எழுதிய தலையங்க கட்டுரைகள் உள்ளத்தைப் பிடித்து இழுத்துப் பேராவலைத் தூண்டும் வண்ணம் சிறந்திருந்தன. “ கல்கத்தா காய்ச்சல், ஓமான் கடற்கரையிலே, ரிப்பன் கட்டிடத்துச் சீமான்கள் “ முதலிய கட்டுரைகள் பெரியார் அவர்களை வசீகரித்தவை ஆகும்.
அண்ணா அவர்களின் முதல்  நாடகம் சந்திரோதயம். விடுதலை இதழில் தொடராக வெளிவந்த அந்த நாடகம் பிறகு பாரதிதாசன் தலைமையில் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.அந்த நாடகத்தில் கிடைத்த வருமானத்தை வைத்து திராவிட நாடு இதழ் கொண்டு வரப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கோவில் சொத்துகள் பொதுமக்களுக்கானது, தொழிலாளர் தோழனாக அரசாங்கம் இயங்க வேண்டும், பெண்கள் மறுமணம் செய்துக்கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகளை ஊட்டியது அந்த நாடகம் தான்.
“ சட்டம் ஓர் இருட்டறை  , அதில் வக்கீலின் வாதம் ஓர் ஒளிவிளக்கு. “ எனும் வாசகம் நீதித்துறையின் மறை எனலாம். அது திராவிட நாடு இதழில் தொடராக வெளிவந்த வேலைக்காரி நாடகத்தில் இடம் பெற்ற வாசகம் அல்லவா!.
14.01.1965  அன்று குடியாட்சிக் கோமான் - கட்டுரை திராவிட நாடு இதழில் வெளிவந்தது. முடியாட்சியின் கொடுங்கோலத்தையும் மக்களாட்சியின் அவசியத்தையும் அந்த கட்டுரை விவரித்திருந்தது.அரசன் அமரும் இருக்கை அமருவோனின் மனதைக் கல்லாக்கிவிடுகிறது.  மணிமுடி இருக்கிறதே ,அதனை சூட்டிக்கொண்டதும் சூட்டிக்கொள்பவனின் மூளையை அப்படியே அது அழுத்தி அழுத்தி சிறியதாக்கி விடுகிறது என்றும் குடியாட்சி முறை என்பது முற்றுப் பெறாத ஒரு செயல் திட்டம் , விறுவிறுப்பான சிந்தனையுடன் அந்தச் செயல் திட்டம் இணைந்திருக்க வேண்டும்  என அந்த கட்டுரையில்  எழுதிய அவர் “ குடியாட்சி எனும் முறை கிரேக்க நாட்டிலேதான் முதலில் மலர்ந்தது என்று அரசியல் முறைகள் பற்றிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மேனாடுகளைப் பொறுத்தவரையில் பொறுத்தமான உண்மைதான் என்றாலும் பழந்தமிழகத்தி்ல் குடியாட்சி முறைகள் குறிப்பாக சிற்றூர்களிலே – செம்மையாக இருந்து வந்தன என்பதற்கான சான்று உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருப்பதாக கோடிட்டுக்காட்டினார்.
குடி அரசு பத்திரிகைக்கு ஜாமீன் கேட்டு அரசு தொல்லைக்கொடுத்தப்போது பெரியார் அந்த இதழை புரட்சி என மாற்றினார்.அதற்கும் தொல்லை வந்தபோது பகுத்தறிவு என மாற்றினார். நிலைமை சரியானதும் பழையபடி குடி அரசு என்னும் பெயரில் பத்திரிக்கையை  வெளிக்கொணர்ந்தார். ஆனால் திராவிட நாடு இதழ் பல்வேறு  பிரச்சனைகளை சந்தித்தாலும் திராவிட நாடு இதழின் பெயரை மாற்றவே இல்லை.
திராவிட நாடு வார இதழுக்கு நிகராக மற்றொரு இதழ் மதிக்கப்பட்டு வந்தது.அது திரு.டி.எம். பார்த்தசாரதி நடத்திக்கொண்டிருந்த  நம்நாடு இதழ். திராவிட நாடும்,  நம் நாடு இதழும் இரட்டை பத்திரிக்கைகள் எனலாம்.இந்திய இதழ்களில் ,  தேர்தல் அறிக்கையை  நாளிதழில் வெளியிட்டு  மக்களின் கோரிக்கையை கட்சியின் கோரிக்கையாக பிரகடனப்படுத்திய இதழ் என்றால் அது நம் நாடுதான்.  நம் நாடு இதழ் ஆசிரியராக நெடுஞ்செழியன் இருந்த பொழுது 11.02.1957 அன்று வரலாற்றில் புதியக்கட்டம் என்னும் தலைப்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்தத் தேர்தல் அறிக்கை இவ்வாறு தொடங்கும்
“ ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
                                                  மக்களாட்சி ஓம்புதும் மக்களாட்சி ஓம்புதும்“
குடிமக்கள் காப்பியம் என போற்றப்படுகிற சிலப்பதிகாரம் வாசகங்களும் திருக்குறளும் முதலில் இடம் பெற தொடங்கியது திராவிட இதழ்களில்தான்.
கட்டாய இந்தித்திணிப்பிற்கு எதிர்ப்பு, பெயருக்கு முன் திரு.திருமதி பயன்பாடு, திராவிட இயக்கத்தை ஆராய தனிக்குழு என்கிற பல்வேறு கோரிக்கைகளை நம் நாடு இதழ் பிரசுரத்திருந்தது. 27.1.1971 ஆண்டு தேர்தல் வாக்குருதிகள் “ வீட்டுக்கு விளக்கு , நாட்டுக்கு தொண்டன் “ எனும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. நம் நாடு, திராவிட நாடு இதழ்களில் தேர்தல் அறிக்கை என்றாலும், உலக வரலாற்று கட்டுரை, கேலிச்சித்திரம் ,  கேள்விப்பதில் , தலையங்கம் எதுவென்றாலும் இந்திய சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
“ நான் முதலாவது அத்தியாயத்தை எழுதி வைத்துவிட்டுப்போகிறேன். தம்பி கருணாநிதி அடுத்த அத்தியாயத்தை எழுதுவார் “ என்று கூறிச்சென்றார் பேரறிஞர் அண்ணா. முதல் அத்தியாயம் திராவிட நாடு என்றால் அடுத்த அத்தியாயம் முரசொலி எனலாம். ஒரு முறை கலைஞர் அவர்கள்“நான்  ஒரு கட்சிக்கு தலைவனாக இருப்பதை விடவும், தமிழ் நாட்டிற்கு முதலமைச்சராக இருப்பதை விடவும் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் “ என்றார்.
“ திருக்குறள் மூட நம்பிக்கை குறைவாக உள்ள பழைய நூல் “ இதை சொன்னவர் யார் தெரியுமா? ஈ.வெ.ரா பெரியார்தான்.திருக்குறளில் உள்ள முதலதிகாரமான கடவுள் வாழ்த்து மூட நம்பிக்கையின் வெளிப்பாடு என்கிறார் அவர்.தமிழர்களின் வேதம் என போற்றப்படுகிற திருக்குறளுக்கு உரை எழுதுதல் என்பது தமிழறிஞர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகவே கருதப்படுகிறது.பரிமேலழகர் தொடங்கி இன்று வரை பல அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.“ இமய மலைக்கு பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்“ என்கிற முகவுரையுடன்  கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்  முரசொலியில்  தொடராக திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினார்.  கலைஞர் அவர்கள் முதலதிகாரத்தில்  மூட நம்பிக்கையை கலையும் பொருட்டு திருக்குறளில் திருத்தத்தை ஏற்படுத்தி  தமிழறிஞர்களையும், பண்டிதர்களையும் பிரமிக்க வைத்துவிட்டார். ஆமாம் கடவுள் வாழ்த்து என்கிற அதிகாரத்தை வழிபாடு என மாற்றியதோடு இல்லாமல் அவ்வதிகார குறட்களுக்கு புதிய கோணத்தில் உரை எழுதினார்.
1942 ஆகஸ்ட் 10 அன்று திராவிட நாடு இதழில் இளமைப்பலி எனும் கட்டுரை வாயிலாக எழுத்துலகில் பேனாத்தடம் பதித்தவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ,திராவிட நாடு இதழில் எழுதுவதற்கு முன்பே அவர் முரசொலி எனும் இதழை தொடங்கியிருந்தார். பள்ளிப் பருவத்தின் போது,திருவாரூரில்கையலகச் சின்னஞ்சிறிய முரசொலியை தொடங்கியிருந்தார்.தனி ஒருவரால் தொடங்கப்பட்ட ஒரு இதழ் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக அவரிடமே இருந்துக்கொண்டிருப்பது உலகில் வேறெங்கும் நடந்தேறாத ஒன்றாகும்.
 முரசொலியில்  உடன்பிறப்புகளுக்கு................ என வெளிவந்துக்கொண்டிருக்கும்  கடித இலக்கியம் அரசியல்- இலக்கியம்- வரலாறு மூன்றும் கலந்த கருத்து திரட்டு எனலாம்.  சோஷலிசப் புரட்சியை நடத்திய மாமேதை லெனின் நடத்திய ஏடு இஸ்கரா ( எரிகதிர்) முடங்கிப்போனதுண்டு. ஆனால் கலைஞரின் முரசொலி இமயமலைகளையே எதிர்த்து இடறி வென்றுக்காட்டியுள்ளது.
                         இந்திராகாந்தி அவர்கள் இந்திய நாட்டில்அவசர நிலை பிரகடனத்தை ஏவி இந்திய பத்திரிக்கை சுதந்திரத்தை முடக்கிய பொழுது இந்தியாவில் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்த ஒரே இதழ் முரசொலி மட்டும்தான். இந்திராக்காந்தி அம்மையாரை இட்லராகச் சித்தரித்த முரசொலி கார்ட்டூன் அமெரிக்க , ஐரோப்பிய ஏடுகளில் பிரசுரமாயிற்று.
                  மாநில சுயாட்சிக்கொள்கை, தமிழக மறுமலர்ச்சிக்கு தொடர்ந்து உழைப்போம்,சுதந்திர ஜனநாயம் சமதர்ம ஜனநாயம் , கூட்டாட்சிக்கு குரல் கொடுப்போம், கொல்லைப்புறமாக கொண்டு வரும் இரட்டை ஆட்சி முறை போன்ற கட்டுரைகள் முரசொலி தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுத்துக்கொடுத்த கட்டுரைகளாகும்.
“ கெல்லிஸ் “ என்ற பெயரை கிள்ளியூர் என்றும், ஸி எஸ்டேட் என்கிற பெயரை பட்டினபாக்கம் என்றும் டால்மியாபுரம் என்பதை கல்லக்குடி என்றும் மாற்றிபுரட்சியை ஏற்டுத்திய இதழ் முரசொலி. “ ஓடி வந்த இந்திப்பெண்ணே .... நீ     
                                                                     தேடிவந்த நாடிதல்லவே “  முரசொலியில் வெளிவந்த இடி முழக்க கவிதைதான் இந்தியை தமிழ்நாட்டை விட்டு விரட்டியடித்தது.
“ முரசு மாறிரட்டும் அருந்தொழில்“ – ஐங்குறுநூறு, “ முரசு கடிப்பிகுப்பும்“- புறநானூறு ” முரசுடைச் செல்வர் ....” அகநானூறு போன்ற சங்கத்தமிழ் வரிகள் முரசொலி இதழுக்கு சாலப்பொருந்தும்.
தமிழர்களுக்கு தமிழ் உணர்வை வீரத்தாயின் பாலாக ஊட்டிய பெருமை முரசொலியை சாரும்.“ பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் இடியுது பார் ஈரோட்டுப் பூகம்பத்தால்!” “ கட்டிய நாய்களல்ல , எட்டிய மட்டும் பாய! ” போன்ற முரசொலி வரிகள் உணர்ச்சியற்ற தமிழர் நரம்புகளை முறுக்கேறி உணர்ச்சியூட்டிய வரிகளாகும்.
                   இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது முரசொலி வாசகம். அப்படியானால்  இன்றைய வரலாறு என்பது நேற்றைய திராவிட இதழ்களின் அளப்பரிய சாகசம் எனலாம்.                          
ரோம், மார்க்கத் துறைக்குத்  தலைநகரம்!
                                                                    பாரிஸ் , அரசியல் உலகிற்கு தலைநகரம்
                                                          திராவிடம் ..................?
பத்திரிக்கை உலகின் தலைநகரம்.
                          திராவிட இதழ்களின் வியத்தகு  சாதனை என்பது   இந்திய சமூகப்புரட்சிக்கு வித்திட்டது அல்ல. அது உலகப்புரட்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதே!
                                                                                  அண்டனூர் சுரா
                                                              தொடர்புக்கு  958565 - 7108




நன்றி.
பார்வை நூல்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு – கவிஞர் கருணானந்தம்
பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி  ( 1, 2)
பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு- மறைமலையடிகள்
நெஞ்சுக்கு நீதி – கலைஞர்
திருக்குறள் உரை – கலைஞர்
புகழின் உச்சியில் கலைஞர் – மோ.பாட்டழகன்
தி,மு.க. தேர்தல் அறிக்கைகள் – நாளந்தா பதிப்பகம்